பாராட்டு, எதிர்ப்பு என்று ட்ரென்டிங் ஆன சர்ஃப் எக்செல் விளம்பரம்!

சர்ஃப் எக்செல் விளம்பரம்!

இந்த சர்ஃப் எக்செல் விளம்பர மோதல் டுவிட்டரில் பூதாகரமாக உருவெடுத்து டிரெண்டாகி வருகிறது. யூடியூபில் இதுவரை அதை 8 லட்சத்துக்கும் மேற்பட்டாோர் பார்த்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அண்மையில் வெளியான SURF EXCEL விளம்பரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளத்தில் மிகப்பெரும் வார்த்தைப் போரே நடைபெற்று வருகிறது

லக்ஸ். சர்ஃப் எக்செல். வேசலின் உள்ளிட்ட பல்வேறு பிரபல பொருட்களை தயாரிக்கும் இந்துஸ்தான் லீவர் சமீபகாலமாக வெளியிடும் விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடந்தபோது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ விளம்பரத்தில் தன் தந்தையை கும்பமேளா கூட்டத்தில் அனாதையாக மகன் விட்டுச் செல்லும் காட்சி இருந்தது. அதைத் தொடர்ந்து #BoycottHindustanUnilever என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி, ரம்ஜான் மற்றும் ஹோலி பண்டிகைகளை முன்னிட்டு வெளியான விளம்பரம் சமூகவலைதளங்களில் பெரும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிறுமி மீது சில சிறுவர்கள் வண்ணப்பொடிகளை தூவுகின்றனர். அவர்களிடம் இருந்த வண்ணக்கலவை தீரும்வரை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் அச்சிறுமி தன் சைக்கிளில் இஸ்லாமிய சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்று மசூதியில் விடுகிறாள்.

இந்த விளம்பரம் இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு சம்பாதித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இந்துக்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி சர்ப் எக்செல்லை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் எனக்கூறி #BoycottSurfExcel என டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி , எதிர்ப்பாளர்களின் மனங்களை சோப்புத்தூளை வைத்து சுத்தப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு மாறாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இருப்பதாக ஒரு சாரார் அதை பாராட்டி வருகின்றனர். ஒருவர், 2 கிலோ எக்ஸ்ட்ரா வாங்கப்போவதாக டுவீட் செய்துள்ளார்.

இந்த மோதல் டுவிட்டரில் பூதாகரமாக உருவெடுத்து டிரெண்டாகி வருகிறது. யூடியூபில் இதுவரை அதை 8 லட்சத்துக்கும் மேற்பட்டாோர் பார்த்துள்ளனர்.Also see...  பதறவைத்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்... விசாரணையை விரிவு படுத்துமா போலீஸ்?
Published by:Vaijayanthi S
First published: