ஒரு வாரத்தில் 1,800 ரூபாய் அதிகரிப்பு! புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை

கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 237 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையில் 1,896 ரூபாய் அதிகரித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 8, 2019, 8:45 AM IST
ஒரு வாரத்தில் 1,800 ரூபாய் அதிகரிப்பு! புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: August 8, 2019, 8:45 AM IST
தங்கத்தின் விலை ஒரு சவரன் 28,000- தைக் கடந்துள்ளது. இன்னும் தங்கத்தின் விலை அதிகரிக்குமா அல்லது
கையில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்கலாமா என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் தங்கத்தின் விலை, புதிய உச்சமாக 3,547 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28, 376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை 46 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டு நோக்கத்தில் தங்கம் வாங்கி வைத்துள்ளவர்கள் தங்கத்தை விற்று லாபம் பெறலாமா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாதிரிப்படம்


Loading...

தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், தங்கம் வாங்க ஒதுக்கி வைத்த தொகையை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 237 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையில் 1,896 ரூபாய் அதிகரித்துள்ளது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஒரு கிராம் 526 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் இன்று வரை 4,208 ரூபாய் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க... அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...