பொதுப்பிரிவினர் மட்டுமே 67% கல்விக்கடனைப் பெற்றுள்ளனர்! மத்திய அரசு அறிக்கை

பொதுப்பிரிவினர் மட்டுமே 67% கல்விக்கடனைப் பெற்றுள்ளனர்! மத்திய அரசு அறிக்கை
  • News18
  • Last Updated: December 2, 2019, 9:32 PM IST
  • Share this:
நாடு முழுவதும் 67 சதவீதம் கல்வி கடன்கள் பொதுப்பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

கல்வி கடன்கள் குறித்த அறிக்கை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  அதில், 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4 லட்சத்து ஆயிரம் மாணவர்கள் கல்வி கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 67 சதவீதம் கடன் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் 23 சதவீதமும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 7 சதவீதமும், பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 3 சதவீத கல்வி கடன்களைப் பெற்றுள்ளனர். மத்திய அரசின் கல்வி கடன்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம் மற்றும் தேசிய கடன் உத்தரவாத நிதியம் சார்பில் ஏழு லட்சம் ரூபாய் வரை உத்தரவாத பிணையிலா கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது.


Also see:

 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading