ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு!

ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு!
ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு
  • News18
  • Last Updated: August 16, 2019, 9:28 AM IST
  • Share this:
இங்கிலாந்து அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்த 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி சிரியாவுக்கு பெட்ரோலியத்தை கடத்தி சென்றதாக கிரேஸ்-1 என்ற ஈரான் கப்பலை இங்கிலாந்து அரசு சிறைப்பிடித்தது. இந்நிலையில் இந்தக் கப்பலை விடுவிக்கக் கோரி ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து கிரேஸ் 1 கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜிப்ரால்டர் பகுதி நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த நிலையில் கப்பலில் சிக்கிய 24 இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் முரளிதரன், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த நிலையில், இங்கிலாந்து அரசு அதிகாரிகளால் 24 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்