பா.ஜ.க கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் இழப்பு! சமாளிப்பாரா நிதிஷ் குமார்

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது மரியாதை உள்ளது; ஆனால், அவர் பா.ஜ.கவுடன் இணைந்திருப்பதால் அவருக்கு வாக்களிக்கத் தயக்கமாகவுள்ளது என்று பீகாரின் முக்கிய இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் பா.ஜ.கவும் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

அந்த 13 தொகுதிகளில் 15 முதல் 70 சதவீத மக்கள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பீகாரின் கிஷன்கன்ஜ் பகுதியில் அதிகபட்சமாக 70 % பேர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு பீகாரிலிருந்து 5 முஸ்லீம் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பீகாரில் இஸ்லாமியர்கள் மத்தியில் சக்தி வாய்ந்த இஸ்லாமிய அமைப்பு இம்ரட் ஷரியா.

தேர்தல் சூழல் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா அனிஷ் உர் ரஹ்மான் குயாஸ்மி, ‘மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அரசியல் கட்சிகள் குறைந்த அளவிலேயே எங்கள் சமூகத்துக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். எங்களுக்கு நிதிஷ் குமாரைப் பிடிக்கும். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு தயக்கமாக இருக்கிறது. மற்ற முதல்வர்களை ஒப்பிடும்போது, நிதிஷ்குமார் இஸ்லாமியர்களுக்கு சிறப்பான முதல்வராகத் தான் இருந்துள்ளார்.

ALSO READ: காங்கிரஸ் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்! நிதிஷ் குமார்

ஆனால், மக்களுக்குத் தெரியும், நிதிஷ் குமாருக்கு அளிக்கும் வாக்குகள் மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு உதவும் என்று. நிதிஷ் குமார் நல்ல தலைவர்தான். ஆனால், அவருடை விருப்பங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறைவேற்ற முடியாது.

அதனால், இஸ்லாமிய மக்கள் இரு மனதுடன் இருக்கின்றனர். பீகாரை, நிதிஷ்குமார் வளர்ச்சியில் முன்னெடுத்துச் சென்றுள்ளார்’ என்று தெரிவித்தார். ஏப்ரல் 18-ம் தேதி பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:


Published by:Karthick S
First published: