மேற்குவங்கத்தில் இரண்டு நாள்களில் 500 மருத்துவர்கள் ராஜினாமா; திணறும் மம்தா பானர்ஜி

எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று மருத்துவர்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர். அதனால், ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, ‘இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.கவின் சதி’ என்று தெரிவித்தார்.

news18
Updated: June 15, 2019, 6:08 PM IST
மேற்குவங்கத்தில் இரண்டு நாள்களில் 500 மருத்துவர்கள் ராஜினாமா; திணறும் மம்தா பானர்ஜி
மருத்துவர்கள்
news18
Updated: June 15, 2019, 6:08 PM IST
மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும், மம்தா பானர்ஜியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் விடுமுறையில் சென்றுள்ளனர். அதனால், மேற்குவங்கத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் பரிபாஹா முகோபத்யாயா என்பவரை கடந்த திங்கள்கிழமை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மற்ற மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு அழைப்புவிடுத்தது. அதனையடுத்து, டெல்லியிலுள்ள மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியிலுள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லேடி ஹார்டிக்கி மருத்துவக் கல்லூரி, குரு தேக் பஹதூர் மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

மருத்துவமனையில் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்துவருகிறது. முன்னதாக, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களைச் சந்திக்க மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது, ’எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று மருத்துவர்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர். அதனால், ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, ‘இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.கவின் சதி’ என்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் பேச்சு மருத்துவர்களிடையை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்திருந்தார். அவருடைய அழைப்பை மருத்துவர்கள் புறக்கணித்துவிட்டனர். முதலில் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

வியாழக்கிழமை முதல் சனிக்கிழமைக்குள் மட்டும் அரசு மருத்துவர்கள் சுமார் 500 பேர் வேலையிலிருந்து பணி விடுப்பு பெற்றுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிவிடுப்பில் சென்றுள்ளனர். அதனால், மேற்கு வங்கத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.

Also see:

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...