ஒரே கிணற்றில் மிதந்த புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் - அதிர்ச்சி சம்பவம்

ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒரே கிணற்றில் மிதந்த புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் - அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் நடந்த இடம்
  • Share this:
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றில் புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் உள்ள, பேக் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

இதனை அடுத்து, கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.


மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீராம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் இறந்துபோன 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading