முகப்பு /செய்தி /இந்தியா / விளம்பர சர்ச்சை.. மங்கள்சூத்ரா விளம்பரத்தை திரும்ப பெற்றார் சப்யாசச்சி

விளம்பர சர்ச்சை.. மங்கள்சூத்ரா விளம்பரத்தை திரும்ப பெற்றார் சப்யாசச்சி

விளம்பர சர்ச்சை

விளம்பர சர்ச்சை

சர்ச்சையை ஏற்படுத்திய மங்கள்சூத்ரா பிரச்சாரத்தை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது.

  • Last Updated :

சர்ச்சையை ஏற்படுத்திய மங்கள்சூத்ரா விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜியின் சமீபத்திய விளம்பர படம் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. புதுவகை மங்கள்சூத்ரா (தாலி) என அவர் அறிமுகம் செய்த விளம்பர பிரச்சாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இது இந்து கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டினர். இதில் சிக்கல் என்னவென்றால் விளம்பர மாடல்கள் அணிந்திருந்த உடைதான் இங்க பிரச்னைக்கு காரணமாக அமைந்தது. உள்ளாடை அணிந்த பெண் தாலியுடன் ஒரு  ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தான் பிரச்னைக்கு காரணமே. இதுபோன்ற புகைப்படத்தை அவர் தவிர்த்து இருக்கலாம் என குரல்கள் வலுக்கத்தொடங்கியது.

இந்த விளம்பரத்தில் யாருடைய கண்களும் நீங்கள் அறிமுகம் செய்த நகைகளின் மீது இல்லை மாறாக நீங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திய பெண்கள் மீதுதான் இருக்கிறது என்ற பதிவுகளை சமூகவலைத்தளங்களில் அதிகம் காணமுடிந்தது. உங்களுக்கு தாலியை விளம்பரப்படுத்த வேறு யோசனைகள் தோன்றவில்லையா  என சிலர் சமூகவலைதளத்தில் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ தாலி என்றால் எப்படி இருக்க வேண்டும் என அவருக்கு பாடம் எடுக்கும்விதமாக புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த விளம்பரத்தை திரும்ப பெறவில்லை எனில் சட்ட நடவடிக்கை பாயும் என பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து பேசியவர், ‘ இதுபோன்ற விளம்பரங்களை நான் முன்பே எச்சரித்தேன். ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜியை நான் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கிறேன். அவருக்கு 24 மணி நேரம் கொடுக்கிறேன். அதற்குள் இந்த ஆபாசமான விளம்பரத்தை   திரும்ப பெறாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் போலீஸ் படை அனுப்பப்படும்” எனக் கூறினார்.

இதனையடுத்து இந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்  “ பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் ஒரு மாறும் உரையாடலாக மாற்றும் சூழலில், மங்கள்சூத்ரா  உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரம். இது ஒரு கொண்டாட்டத்தை நோக்கமாக கொண்டது. மாறாக அது நம் சமூகத்தின் ஒரு பிரிவினரை புண்படுத்தியதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் பிரச்சாரத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Advertisement, BJP, Costume Designer