6 மணியோடு வேலை ஓவர் - பிரபல நிறுவனத்தின் முடிவுக்கு பணியாளர்கள் பாராட்டு

வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் பணியாளர்கள், நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் பணிச்சுமை அவர்களை மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது.

வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் பணியாளர்கள், நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் பணிச்சுமை அவர்களை மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது.

  • Share this:
கொரோனா தாக்கம் அதிகரிக்க துவங்கிய பிறகு கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே பணியாற்றத் துவங்கியுள்ளனர்.

சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் கூடுதல் நேரம் பணிபுரிய வைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. மேலும் வேலைப்பளுவும் முன்பை விடவும் அதிகமாக இருப்பதாகப் பணியாளர்கள் குறைகூறியதையும் காண முடிகிறது. வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் பணியாளர்கள், நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் பணிச்சுமை அவர்களை மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது.

ஊரடங்கை காரணம் காட்டி நிறுவனங்கள் பலவும் பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்தியும், ஊதியத்தை பாதியாகக் குறைத்தும் வந்தன. இந்த சூழலும் பணியாளர்களைப் பாதித்தது. இதனால் பணியாளர்கள் தங்களுக்கு வேலையிழப்பு நேர்ந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அதிக பணி சுமை பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்தனர்.

ALSO READ : இன்ஸ்டாகிராம் Live-ல் பதிவான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்!

இப்படி நிறுவங்கள் தங்கள் பணியாளர்களை அதிக பணி சுமமை வழங்கி வரும் வேளையில், ஜெரோதா(Zerodha) நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

 அதில், ஜெரோதா நிறுவனம் 6 மணிக்கு மேலும், விடுமுறை தினங்களிலும் பணி சார்ந்த அனைத்து விஷயங்களையும் தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த முடிவு மக்களின் மன அழுத்தங்களில் இருந்து விடுபட உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்வது பணியாளர்களின் திறமை முழுமையாக வெளிப்படாமல் போக வாய்ப்பிருப்பதாகவும், மூளை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பதிவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

 

  

  

பலரும் அவரது முடிவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சிலர் பிற நிறுவனங்களும் நிதின் காமத்தின் பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

 

  

  

கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறைகிற வரை பணியாளர்கள் வீடுகளிலேயே பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

 

  

  

 பல நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வைத்து அதிகம் வேலை வாங்கும்போது இதுபோன்ற நிறுவனங்களின் முடிவை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த சூழ்நிலையில் உடல் நலம் மட்டுமல்ல மன நலம் சார்ந்த விஷயங்களையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உடலுக்குப் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்கிறோம். ஆனால் மன ரீதியான பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. பின்னாளில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: