• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட துணை முதல்வர் மீட்பு

பீகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட துணை முதல்வர் மீட்பு

சுஷில் மோடி

சுஷில் மோடி

1975-ம் ஆண்டு பிறகு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தண்ணீர் சூழ்ந்ததால் வீட்டில் சிக்கிக்கொண்ட அம்மாநில துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகில் சென்று மீட்டனர்.

    பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடையறாத கடும் மழை பெய்துவருகிறது. அதனால், மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    பாட்னாவின் பல பகுதிகளில் ஆறு அடி வரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. 1975-ம் ஆண்டு பிறகு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த மழையின் காரணமாக இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடியின் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால் அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அதனையடுத்து, தேசிய பேரிடர் படகில் சென்று சுஷில் மோடியையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டனர்.


    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: