ரூம் விட்டு வெளிய போறியா.. இல்ல கையை அறுத்துக்கவா - டிப்ரஷனில் கல்லூரி பேராசிரியை தற்கொலை

மாதிரிப்படம்

குடும்பத்தினருடன் சத்தம் போட்டுவிட்டு அறைக்கு சென்றவர் 15 நிமிடங்கள் கழித்து சென்று போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

  • Share this:
    மனச்சோர்வு காரணமாக சூரத்தை சேர்ந்த கல்லூரிப்பேராசிரியை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சூரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை பவேஜா, வயது 32. இவரது கணவர் அன்கித் இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். பேராசிரியை தற்கொலை செய்துக்கொண்ட போது கணவர், மகன் மற்றும் பேராசிரியையின் தாய் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

    தாயாருடன் சத்தம் போட்டுவிட்டு அறைக்கு சென்றவர் 15 நிமிடங்கள் கழித்து சென்று போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், “ பேராசிரியை கடந்த 15 வருடங்களாக மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார். தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பு அவரது தாயாரை அறையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
    அவர் வெளியே செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

    நீ இப்ப வெளிய போறியா இல்ல கையை அறுத்தக்கட்டுமா என சத்தம் போட்டுள்ளார். பிளேடை கொண்டு மணிக்கட்டை அறுத்துக்கொள்வேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவரது தாயார் அறையை விட்டு வெளியேறியுள்ளார். கணவர், குழந்தை, அவரது தாயார் மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். அந்த அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்துள்ளனர். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்’ என்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: