கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மன உளைச்சலால் அவதிப்படுவோர் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மன உளைச்சலால் அவதிப்படுவோர் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு

கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலாலும் பதற்றத்தாலும் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  இங்கிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், பகுதி வாரியாக மக்களின் உளவியல் நலன் குறித்து ஆராயப்பட்டது. இங்கிலாந்தில் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகக் கடுமையான மன அழுத்தத்தைச் சந்திப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

  இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மன உளைச்சல் மற்றும் பதற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்து புகாரளிக்கும் மக்களின் விகிதம் 52 சதவீதத்தை எட்டியது. இது COVID-19க்கு முன்னர் 17 சதவிகிதமாக இருந்த நிலையில், இப்போது மூன்று மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து ஜர்னல் சைக்கோசோமேடிக் மெடிசின் இதழில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா காலத்தில் மனநல பாதிப்புகள், குறிப்பாக இளையவர்கள், பெண்கள், வேலையில்லாதவர்கள் அல்லது குறைந்த வருமானத்தில் உள்ளவர்களை அதிகம் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையைச் சேர்ந்தவரான டாக்டர் ஜெய்ம் டெல்கடிலோ இதுகுறித்து கூறுகையில், தேசத்தின் மன ஆரோக்கியம் குறித்த பிரச்னையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

  Also read: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது  மனநலப் பிரச்னைகள் மிகவும் ஆபத்தானவை. அவை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாக நேரிடும். எனவே, நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் சுகாதாரத்துறையினரும் இந்த சவாலான நேரத்தில் மக்களின் மன ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் மைக்கேல் பார்காம், COVID-19 ஒரு மனநல சுகாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று என தெரிவித்துள்ளார்.

  இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரியாவிலுள்ள டோனாவ்-யுனிவர்சிட்டட் கிரெம்ஸை மையமாகக் கொண்ட தலைமை புலனாய்வாளர் டாக்டர் கிறிஸ்டோஃப் பை, கொரோனா ஒரு புதிய நோய். உலகளாவிய ஊரடங்கு நடவடிக்கைகள் எங்கள் தலைமுறைக்கு பரிச்சயமில்லாதவை என்பதால் தற்போதைய தொற்றுநோய் காலத்து மனநல பாதிப்புகள் குறித்து நாங்கள் அறியவில்லை என்றார்.

  மேலும், பொதுமக்களின் உளவியல் ஆரோக்கியம் குறித்து ஆராய இந்த ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம் என தெரிவித்தார். இந்த ஆய்வு பேராசிரியர் கிறிஸ்டோஃப் பை, ஆஸ்திரியாவின் பேராசிரியர் தாமஸ் ப்ராப்ஸ்ட் தலைமையில் ஆஸ்திரிய, பெல்ஜியம் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பில் நடைபெற்றுள்ளது.
  Published by:Rizwan
  First published: