வங்கிகளில் டெபாசிட்களுக்கு காப்பீட்டுத் தொகை - புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பணம் - மாதிரிப் படம்

இந்த மசோதாவின்படி, அனைத்து வங்கி டெபாசிட்டுகள், அனைத்து வர்த்தக வங்கிகள் ஆகியவை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவரப்படும்.

 • Share this:
  நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கிகளில் 5 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வகைசெய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

  அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் ஆகியோர், நிதி நெருக்கடியால் முடங்கும் வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்போருக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தனர்.

  இதையடுத்து, வைப்புத்தொகை காப்பீட்டு கடன் உத்தரவாத கழக மசோதா-வை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

  Also read : குடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..

  இந்த மசோதாவின்படி, அனைத்து வங்கி டெபாசிட்டுகள், அனைத்து வர்த்தக வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் ஆகியவை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவரப்படும்.

  வங்கி முடக்கப்பட்டு 90 நாட்களுக்குள் வைப்புத் தொகை, அதற்கான வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்டுகளுக்கு காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  இந்த வரம்பில், 98 புள்ளி 3 சதவீத கணக்குகள் இடம்பெறும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். வழக்கமாக 8 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே பணம் கிடைக்கும் நிலையில், தற்போது வங்கி செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, 90 நாட்களுக்குள் பணம் கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  Also Read : வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

  இதேபோல, பொறுப்பு துறப்பு ஒத்துழைப்பு சட்டத்தில் முதல்முறையாக திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், சிறு நிறுவனங்கள் மீதான குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்றும், சிறு நிறுவனங்கள் தொழில் செய்வது எளிதாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: