மத்தியப் பிரதேசத்தில் தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்

news18
Updated: July 11, 2018, 1:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்
தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் மகன்
news18
Updated: July 11, 2018, 1:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயின் சடலத்தை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பாம்பு கடித்து பெண் ஒருவர் இறந்தார். அவரது சடலத்தை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியதால் மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவசர ஊர்தி அனுப்புமாறு இறந்தவரின் மகன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை உரிய பதில் அளிக்கவில்லை.

அதனால் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தன் தாயின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்கு தனது இருசக்கர வாகனத்திலேயே அவர் எடுத்துச் சென்றார். கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...