டெல்லியை அச்சுறுத்தும் டெங்கு... நவம்பரில் மட்டும் 5,600 பேருக்கு பாதிப்பு
டெல்லியை அச்சுறுத்தும் டெங்கு... நவம்பரில் மட்டும் 5,600 பேருக்கு பாதிப்பு
காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும்.
காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும்.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பணிசமாக அதிகத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 5,600 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 7,100 பேர் டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
நவம்பர் 15 -ம்தேதி நிலவரப்படி டெல்லியில், 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2015-க்கு பின்னர் பதிவான மிகப்பெரிய பாதிப்பு என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 1,850 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அரசு கூறியுள்ளது.
2015-ல்தான் மிகப்பெரிய அளவில் டெங்கு பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது. அந்த ஆண்டில் மட்டும் 10,600 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
டெங்கு காய்ச்சல் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. டெங்கு தொற்று பரவலானது லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதால், மக்கள் பொதுவாக வீட்டிலேயே சிகிச்சை பெற விரும்புவார்கள். இருப்பினும், டெங்கு தொற்று கடுமையான திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படும் என்று கூறிவிட முடியாது. டெங்கு காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும். ஏடிஸ் என்ற கொசுவால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகி, பகலில் மட்டுமே கடிக்கக் கூடியது.
பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைத்துள்ள குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் போன்றவற்றை கொசு புகாதவகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பழைய டயர். தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப், பெயிண்ட் டப்பா போன்றவற்றை அகற்றிட வேண்டும்.
காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
Published by:Musthak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.