Home /News /national /

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் பொளாதாரத்தை பின்னுக்கு தள்ளின - ரகுராம் ராஜன்

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் பொளாதாரத்தை பின்னுக்கு தள்ளின - ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது போதுமானதல்ல என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
    உலகப் பொருளாதாரம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய 2 நடைமுறைகளும், நாட்டின் பொளாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசிய அவர், இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது போதுமானதல்ல என்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் கையிலேயே அதீத அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னையே இந்த அதிகாரக் குவிப்புக்கு சிறந்த உதாரணம் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Demonetisation, GST, Raghuram Rajan

    அடுத்த செய்தி