ஹோம் /நியூஸ் /இந்தியா /

பண மதிப்பிழப்பு முடிவை நன்கு ஆலோசித்துதான் எடுத்தோம் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பண மதிப்பிழப்பு முடிவை நன்கு ஆலோசித்துதான் எடுத்தோம் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை

கள்ள நோட்டு புழக்கம், கணக்கில் வராத வருவாய், பயங்கவாத நிதி ஆதராம் ஆகியவற்றை கட்டுப்படுத்த பண மதிப்பு நடவடிக்கை முக்கிய பங்கு வகித்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்துதல், பயங்கவாத நிதி பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிய நோக்கத்தை கருத்தில் கொண்டு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அன்று 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. பின்னர் இதற்கு மாற்றாக புதிய 500,2000 நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன.

  இந்த நடவடிக்கை மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, "பண மதிப்பு நீக்கம் என்பது நன்கு ஆலோசிக்கப்பட்டு எடுத்த முடிவாகும். அறிவிப்பு வெளியாவதற்கு எட்டு மாதம் முன்னரே ரிசர்வ் வங்கியிடம் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கத் தொடங்கியது.

  இதையும் படிங்க: 'படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது..' - டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

  நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களை மேம்படுத்தும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கள்ள நோட்டு புழக்கம், கணக்கில் வராத வருவாய், பயங்கவாத நிதி ஆதராம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகித்தது. மேலும், இந்த நடவடிக்கைக்கு பின்னர், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து டிஜிட்டல் பணி பரிவர்த்தனை உயர்ந்துள்ளது." இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Central government, Demonetisation, RBI, Supreme court