’தாஜ்மகாலை பராமரியுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள்’- உச்சநீதிமன்றம் காட்டம்

news18
Updated: July 11, 2018, 5:50 PM IST
’தாஜ்மகாலை பராமரியுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள்’- உச்சநீதிமன்றம் காட்டம்
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 5:50 PM IST
தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை இடித்துத் தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் உத்தரப்பிரதேச அரசையும் கடுமையாக சாடியுள்ளது.

தாஜ்மகாலை பாதுகாக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில், உத்தரப்பிரதேச அரசு தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த தொலைநோக்கு திட்ட அறிக்கையை ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. எனினும், தொலைநோக்கு திட்ட அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு சமர்ப்பிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,  “தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது இல்லை. தாஜ்மகாலை காக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்துத் தள்ளுங்கள்” என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

மேலும், பாரிஸிலுள்ள ஈஃபில் கோபுரத்தை விட தாஜ்மகால் அழகாக இருப்பதாகவும், அதை வைத்து நமது அந்நிய செலாவணி பிரச்னைகளை தீர்த்திருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

“ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் பேர் தொலைக்காட்சி கோபுரம் போல் உள்ள ஈஃபில் கோபுரத்தை பார்ப்பதற்கு செல்கிறார்கள். நமது தாஜ்மகால் அதை விட எவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் மட்டும் அதை பாதுகாத்திருந்தால், நம் அந்நிய செலாவணி பிரச்னைகளை சுலபமாக தீர்த்திருக்க முடியும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் உங்களின் அலட்சியத்தின் மூலம் நம் நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Loading...
இந்த வழக்கை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தாஜ் டிரெபீசியம் சோனின் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...