Home /News /national /

70 ஆண்டுகளாக காத்த ஜனநாயகத்தை 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்

70 ஆண்டுகளாக காத்த ஜனநாயகத்தை 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்னை ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர்.

    வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் இன்றை நடைபெறுகிறது. டெல்லியில் இந்த போராட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, நாட்டின் பொருளாதாரம், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, "கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு கல்லாக அடுக்கி கட்டிவைத்த நாட்டின் ஜனநாயகத்தை கடந்த 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது. இந்தியாவில் ஜனநாயகம் செத்து வருகிறது. மக்கள் பிரச்னைகள் இந்த அரசு புறக்கணிக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயக ஆட்சி இல்லை. மாறாக நான்கு பேரின் சர்வாதிகார ஆட்சி தான் உள்ளது.

    இந்த அரசுக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்றார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, என்னை அவர்கள் கைது செய்தால் அதற்கு மிகவும் மகிழ்ச்சி அடையும் நபராக நான் தான் இருப்பேன்" என்றார்.


    முன்னதாக விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகிய விவகாரங்களை எழுப்பி டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பேரிகேடுகள் அமைத்து காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தங்களை தடுத்து திசை திருப்பும் நோக்கில் தான் இது போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மூலம் மத்திய பாஜக செய்வதாக காங்கிரஸ் புகார் தெரிவித்து வருகிறது.

    இதையும் படிங்க: அன்புடன் உங்கள் கலெக்டர் மாமா..! மழை விடுமுறையை மாணவர்களுக்கு பாசத்துடன் கடிதம் எழுதி அறிவித்த கலெக்டர்.. வைரலாகும் பேஸ்புக் பதிவு

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்னை ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress party, Rahul gandhi

    அடுத்த செய்தி