இந்தியாவில் கற்பனையில் மட்டுமே தற்போது ஜனநாயகம் உள்ளது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்தியாவில் கற்பனையில் மட்டுமே தற்போது ஜனநாயகம் உள்ளது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ராகுல் காந்தி

விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டங்களை  நடத்தி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தலையீடு தேவை என்று கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கப் பேரணியாகச் சென்றனர்.

  • Share this:

பிறகு, ராகுல் காந்தி, ஆளும் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார், இந்தியாவில் கற்பனையில் மட்டுமே தற்போது ஜனநாயகம் உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்தால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்யப்படுகின்றனர் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மோடியை விமர்சித்தாலும் கூட அவரையும் பயங்கரவாதி என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

“வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு பிரதமர் மோடி பணம் பண்ணிக்கொடுக்கிறார். அவருக்கு எதிராக யார் நின்றாலும் அவரை பயங்கரவாதி என்கின்றனர். அது விவசாயிகளாக இருந்தாலும் தொழிலாளர்களாக இருந்தாலும் மோகன் பாகவத்தாக இருந்தாலும்.

இந்தியாவில் இப்போது ஜனநாயகம் இல்லை, அப்படி இருக்கிறது என்று யாராவது நினைத்தால் அது அவர்கள் கற்பனைதான். இந்த நாட்டின் இளைஞர்கள் நம் பிரதமர் மோடியை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் திறமை இல்லை. அவருக்கு ஒன்றும் தெரியாது, முதலாளிகள் சொல்வதைத்தான் அவர் கேட்பார். அவர்கள் சொல்வதைத்தான் செய்வார்.

விவசாயிகளும் தொழிலாளர்களும் தற்போது ஒன்றிணைகின்றனர், ஆனால் எப்போதும் போல் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள். இது துரதிர்ஷ்டமானது. ஆனால் இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
Published by:Muthukumar
First published: