ஊடகவியலாளர், ஊடக நிறுவனங்களின் பதிவுகளை அகற்ற அரசுகளிடம் இருந்து கோரிக்கை அதிகரிப்பு: ட்விட்டர் தகவல்!

ட்விட்டர்

ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை தெரிவிக்கும்படி அரசாங்கங்கள் விடுத்த கோரிக்கையில் இந்தியா முதலிடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல், பதிவுகளை நீக்கும்படி அதிக சட்ட கோரிக்கைகளை விடுத்த நாடுகளில் ஜப்பான் முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஊடகவியலாளர், ஊடக நிறுவனங்களின் பதிவுகளை அகற்ற அரசுகளிடம் இருந்து வரும் கோரிக்கை அதிகரித்துள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தனது வெளிப்படைத்தன்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது.  அதில், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் பதிவுகளை அகற்றக் கோரி அரசுகளிடம் இருந்து வரும் கோரிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக ட்விட்டர்  தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020ம் ஆண்டின் 2ஆம் பாதியில் ட்விட்டரில் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் என 199 அங்கீகரிக்கப்பட்ட  கணக்குகள், தங்களின் பதிவுகளை நீக்கும்படி அரசுகளிடம் இருந்து 361 சட்ட கோரிக்கைகளை எதிர்கொண்டன  என தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் இது முதல் பாதியை விட 26%   அதிகம் என கூறியுள்ளது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக உயர்வு!


ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் 5 ட்விட்களை  இதன் காரணமாக ட்விட்டர் நீக்கியுள்ளது. மேலும், ட்விட்களை நீக்கும்படி அதிகம் விண்ணப்பித்த நாடாக இந்தியா உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில்  துருக்கி, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியன உள்ளன.

ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை தெரிவிக்கும்படி அரசாங்கங்கள் விடுத்த கோரிக்கையில் இந்தியா முதலிடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல், பதிவுகளை நீக்கும்படி அதிக சட்ட கோரிக்கைகளை விடுத்த நாடுகளில் ஜப்பான் முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.   இது தொடர்பாக, ஜப்பான், இந்தியா, துருக்கி, ரஷ்யா மற்றும்  தென் கொரியாவில் இருந்து 94 சதவீத சட்டக் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: மதுபானங்களின் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு!


1,31,993 கணக்குகளின் பதிவுகளை நீக்கும்படி 38,524 சட்ட கோரிக்கைகளை இந்த காலகட்டத்தில் டிவிட்டர் நிறுவனம் எதிர்கொண்டது. மேலும்,  65 சதவீதத்துக்கும் அதிகமான தவறான உள்ளட்டங்களை தங்களது தொழில்நுட்பம்  முன்கூட்டியே அடையாளம் காண்பதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Published by:Murugesh M
First published: