முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகள் போராட்டம்!

டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகள் போராட்டம்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

  • Last Updated :

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கண்டித்தும், வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Also read... ப.சிதம்பரம் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது - மு.க ஸ்டாலின்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆ.ராசா, தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதி, திருநாவுக்கரசர், டி.ராஜா, சரத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Also see...

top videos

    First published:

    Tags: Jammu and Kashmir