டெல்டா வகை கொரோனா ஆல்பா வகையை விட 60% அதிகமாகப் பரவக்கூடியது: டாக்டர் அரோரா

டாக்டர் என்.கே.அரோரா.

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நம் நாட்டில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, இது ஆல்பா வகை கொரோனாவை விட 40 முதல் 60 சதவீதம் கூடுதலாகப் பரவக்கூடியது என்று டாக்டர் கே.என். அரோரா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பி.1.617.2 என்ற கொரோனா  வகை, டெல்டா வகை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நம் நாட்டில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, இது ஆல்பா வகை கொரோனாவை விட 40 முதல் 60 சதவீதம் கூடுதலாகப் பரவக்கூடியது என்று டாக்டர்  என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

  கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஒட்டுமொத்த மரபணு வேறுபாடுகளை கண்டறிவதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் 28 ஆய்வகங்கள் அடங்கிய இந்திய மரபணுவியல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:

  ஒரு மாதத்தில் சுமார் 50000 மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை தற்போது நாம் பெற்றுள்ளோம். முன்னதாக இந்த எண்ணிக்கை சுமார் 30,000 மாதிரிகளாக இருந்தது.

  பி.1.617.2 என்ற கோவிட்-19 வகை, டெல்டா வகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நம் நாட்டில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது ஏற்படும் புதிய பாதிப்புகளில் 80%, இந்த வகை தொற்றாகும். மகாராஷ்டிராவில் உருவாகிய இந்தத் தொற்று, நாட்டின் மேற்கு மாநிலங்களிலும் அதைத்தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  மனித உயிரணுக்களில் புகுந்த பிறகு இந்த தொற்று வகை வேகமாகப் பரவுகிறது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனினும் டெல்டா வகை தொற்று மிகவும் தீவிரமானது என்பது கூறுவது கடினம். இந்தியாவில் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் முதல் அலையை ஒத்திருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டெல்டா பிளஸ் வகை- ஏஒய்.1 மற்றும் ஏஒய்.2 ஆகியவை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 55-60 பேருக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஏஒய்.1 வகை தொற்று நேபாளம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, போலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஒய்.2 வகை தொற்று, குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்று இது சம்பந்தமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது, என்றார்.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,164 பேருக்குக் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது முந்தைய நாளை விட 7.2% குறைவு. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 4,21,665 ஆகும். நேற்று 499 பேர் கொரோனாவுக்குப் பலியானதில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,14,108 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: