இந்தியாவிலேயே பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு ஊழியர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
2014ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தற்போது இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. நாடு முழுவதும் 1,85,000க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் இணைந்துள்ள ஸ்விக்கி, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாகவும் இருந்து வருகிறது.
ஆனால் டெலிவரி பார்டனர்களை கசக்கிப் பிழிவதாகவும், மிகவும் குறைவான நேரத்தில் நீண்ட தொலைவில் உள்ள டெலிவரிகளை கொடுக்க நிர்பந்திப்பதாகவும் ஸ்விக்கி உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தனது ஊழியர்களுக்காக ஸ்விக்கி நிறுவனம் நேற்று வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ததால் ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்விக்கி, புதிய கொள்கையின் கீழ், கார்ப்பரேட், மத்திய வணிகச் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் ஊழியர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை அனைவருக்கும் பொதுவான இடத்தில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | அம்பானி குடும்பத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்: உச்ச நீதிமன்றம்
குழுத் தேவைகள் மற்றும் பல மேலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆனால் டெலிவரி பார்ட்னர்களை சந்திக்க வேண்டிய ஊழியர்கள் மட்டும் வாரத்தில் சில நாட்களுக்கு அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கியின் மனிதவளத் தலைவர் கிரிஷ் மேனன் கூறுகையில், "எங்கள் கவனம் ஊழியர்களுக்கு அவர்களின் வேலையின் வரையறைகளுக்குள் அதிக நெகிழ்வுத்தன்மையை செயல்படுத்துவதாகும். பணியாளர்கள், மேலாளர்கள் மற்றும் டீம் லீடர்கள் ஆகியோரது துடிப்பான பணியையும், திறமையான போக்கையும் நாங்கள் கவனித்து வருகிறோம். இதுவே எங்கள் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி கொடுக்க வழிவகுத்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வொர்க் ப்ரம் ஹோம் முறையில், பணியாளர் அனுபவம், வேலையில் புதுமைகள் மற்றும் பணியிட அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்தவும் தனியான முதலீடுகளை செய்ய ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புக்கு ஆளான முதல் நபர் குணமடைந்தார் - கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Swiggy, Work From Home