ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய விதிக்கப்பட்டத் தடை நீட்டிப்பு!

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சி.பி.ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி நீடித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

  ஆனால், ரூ.600 கோடி முதலீட்டு வரை மட்டுமே மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கும். ஆனால், விதிமுறைகளை மீறி அனுமதி வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் அனுமதி பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறையும், சி.பி.ஐயும் விசாரித்துவருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சி.பி.ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தனர். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

  கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இந்தத் தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: