ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் 7 பூங்காக்களில் 76 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

டெல்லியில் 7 பூங்காக்களில் 76 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி

டெல்லியில் வசந்த் விஹார் என்ற இடத்தில் உள்ள ஆரவல்லி பல்லுயிர் பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘பட்டாம்பூச்சி மதிப்பீட்டு வாரத்தில்’ ஏழு பல்லுயிர் பூங்காக்களில் மொத்தம் 76 வெவ்வேறு வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வசந்த் விஹார் என்ற இடத்தில் உள்ள ஆரவல்லி பல்லுயிர் பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கம்லா நேரு ரிட்ஜ் என்ற பூங்கா வெவ்வேறு இனங்களைக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின் போது 71 வெவ்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டத்தின்  மலைப்பகுதியான பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1,072 மீட்டா் உயரத்தில், 5,247 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த மலை அமைந்துள்ளது. பச்சமலையில் உள்ள வனவிலங்குகள், பறவை இனங்கள், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து வனத்துறையினர் அவ்வப்போது கணக்கெடுப்பு மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில், மாவட்ட வன அலுவலா் கிரண் தலைமையில் துறையூா் வனச்சரக அலுவலா்கள் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த ‘தி நேச்சா் அண்ட் பட்டா்ஃபிளை சொசைட்டி’ (டிஎன்பிஎஸ்) ஆய்வுக் குழுவினா் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். டாப் செங்காட்டுப்பட்டி, மங்களம் அருவி, செண்பகம் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், 109 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு, புகைப்படங்களாக பதிவு செய்து, ஆவணப்படுத்தப்பட்டன.

பச்சமலையில் கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 105 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன. இந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 109 வண்ணத்துப்பூச்சி வகைகள், அதாவது, 4 வகை வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு கணக்கெடுப்பிலுள்ள வண்ணத்துப்பூச்சிகளின் குடும்ப வகைகளை ஒப்பிட்டுப் பாா்த்தால், இங்கு, 127 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாள்களில் மேற்கொண்ட ஆய்விலேயே, 109 வகை வண்ணத்துப்பூச்சிகள் காண முடிகிறது என்றும் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொண்டால், 175 வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை கண்டறிய வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.

தற்போது, கண்டறியப்பட்டுள்ள 109 வகையான வண்ணத்துப்பூச்சிகளில் குறிப்பிட்ட, 6 வகையைச் சோ்ந்த பூச்சிகளிலிருந்துதான் பிற வகைகள் உருவானதாக தெரியவந்துள்ளது. அதாவது, வஸ்வாலோடெயில்ஸ் வகை(10), வெள்ளை மற்றும் மஞ்சள் (16), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (35), ப்ளூஸ் (24), மெட்டல்மாா்க்ஸ் (1) மற்றும் ஸ்கிப்பா்ஸ் வகையிலிருந்து 23 என்ற அளவில் பிரிவுகள் காணப்படுவதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

Published by:Archana R
First published:

Tags: Delhi