ஹோம் /நியூஸ் /இந்தியா /

வீடியோவில் விவகாரம்.. ஆசை வார்த்தையில் காதல் மயக்கம்.. பெண் யூடியூபரிடம் ரூ.80 லட்சத்தை இழந்த தொழிலதிபர்!

வீடியோவில் விவகாரம்.. ஆசை வார்த்தையில் காதல் மயக்கம்.. பெண் யூடியூபரிடம் ரூ.80 லட்சத்தை இழந்த தொழிலதிபர்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தொழில் ரீதியாக பழகிய பெண் யூடியூபர் ஒருவர் தொழிலதிபரை ஹனி டிராப் செய்து ரூ.80 லட்சம் பணம் பறித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

தொழிலதிபர் ஒருவரை ஹனி டிராப் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் பணம்பறித்த யூடியூபர்கள் இருவரை காவல்துரை தேடி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர் டெல்லியில் விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு டெல்லியின் ஷாமிலார் பாக் பகுதியைச் சேர்ந்த நாம்ரா காதிர் என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளது. இவருடன் தொழிலதிபருக்கு விராட் என்ற நபரும் அறிமுகமாகியுள்ளார். இருவரும் யூடியூபராக இருந்துள்ளனர்.

இருவரும் பிஸ்னஸ் ரீதியாக பேசி திட்டங்களை செயல்படுத்தலாம் என தொழிலதிபரிடம் பேசி மயக்கியுள்ளனர். மேலும், அறிமுகமான பெண் காதிர் அந்த தொழிலதிபரிடம் நெருங்கி பேசி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், புதிய தொழில் திட்டத்திற்காக ரூ.2.50 லட்சம் பணத்தை வேறு அந்த தொழிலதிபர் இவர்களுக்கு தந்துள்ளார்.

இந்நிலையில், அந்த தொழிலதிபருடன் பெண்ணான காதிர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை விராட் ரெக்கார்ட் செய்துள்ளார். இந்த பதிவுகளை வைத்து இருவரும் தொழிலதிபரிடம் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர். தான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் பாலியல் வழக்கு தொடுப்பேன் என்றும் அவரை மிரட்டியுள்ளனர். இதனால், பிளாக்மெயிலுக்கு பயந்து அவர்கள் இருவரிமும் ரூ.80 லட்சம் பணத்தை இழந்துள்ளார் அந்த தொழிலதிபர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் நிலைமையை பொறுக்க முடியாமல் காவல்துறையை அனுகி யூடியூப் ஜோடி இருவர் மீதும் தொழிலதிபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதேவேளை, மோசடிக்காரர்கள் இருவரும் உஷாராகி கடந்த அக்டோபர் மாதம் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடினர். இருப்பினும் நவம்பர் 18 தேதி இந்த முன்ஜாமினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. டெல்லி ஹனி ட்ராப், டெல்லி தொழிலதிபரிடம் மோசடி, ரூ.80 லட்சம் ஹனி ட்ராப் செய்து பறித்த கும்பல், டெல்லி யூடியூபர்கள் ஹனி டிராப்,

First published:

Tags: Crime News, Delhi, Youtube