• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சேலை அணிந்து வந்ததால் ஓட்டலுக்குள் அனுமதி மறுப்பா? - வைரல் வீடியோ... உண்மை என்ன?

சேலை அணிந்து வந்ததால் ஓட்டலுக்குள் அனுமதி மறுப்பா? - வைரல் வீடியோ... உண்மை என்ன?

saree

saree

சேலை அணிந்து வந்ததால் ஓட்டலில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் அணிதா சவுத்ரி என்ற பெண்மணியின் மகள் அர்யமினி ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

  • Share this:
சேலை அணிந்து வந்த காரணத்தால் பெண்ணை ஓட்டலுக்குள் நுழைய விடாமல் தடுத்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலை அணிந்து வந்தால் ஓட்டலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர் அனுமதி மறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார், ஓட்டல் ஊழியரை அடித்ததால் தான் ஓட்டலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக வேறு ஒரு கோணத்திலும் பேசப்படுகிறது. ஆனால் நடந்தது தான் என்ன?

நடந்த சம்பவம் குறித்து சேலை அணிந்து வந்ததால் ஓட்டலில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் அணிதா சவுத்ரி என்ற பெண்மணியின் மகள் அர்யமினி ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

Also read:  ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டிஆர் பங்கேற்றிருக்க வேண்டும்- திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன்

அர்யமினி தெரிவித்திருப்பதாவது, “செப்டம்பர் 19ம் தேதி என்னுடைய பிறந்த நாள் என்பதால் டெல்லி அன்சல் பிளாசாவில் உள்ள அகுயிலா ரெஸ்டாரண்டில் மாலை நேரத்துக்கு டேபிள் ஒன்றை ரிசர்வ் செய்திருந்தேன். மாலை 5.30 முதல் 6 மணிக்குள் நான் ஓட்டலுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் குடும்பத்துடன் தாமதமாக 6.30 மணிக்கு தான் அங்கு சென்றோம். ஆனால் பிரச்னை அதுவல்ல. கேட்டில் காவலுக்கு நின்றிருந்தவர் என்னுடைய பெற்றோரை மேலும் கீழும் பார்த்து டேபிள் எதுவும் புக் செய்துள்ளீர்களா என கேட்டார்.



நானும் டேபிள் புக் செய்ததற்காக மெசேஜை அவரிடம் காண்பித்தேன். ஆனால் நேரம் கடந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நான் காத்திருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றேன். மற்றொரு ஊழியரிடம் சென்ற அவர் 10-15 நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து தனியாக வருமாறு அழைத்து உங்கள் தாயார் சேலை அணிந்திருப்பதால் உங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என கூறினார்.

Also read:  8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

என்னால் வெளியேற முடியாது என சொன்ன போது உங்களால் முடிந்ததை செய்யுங்கள் ஆனால் உங்களை அனுமதிக்க மாட்டோம் என கறாராக கூறிச்சென்றார். பாதுகாப்புக்கு பவுன்சர்கள் என் அருகில் நின்றனர். ஒருசில நிமிடங்கள் கழித்து மற்றொரு ஊழியர் எங்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார், அப்போது கூட இது போன்ற இடத்தில் என்னால் சாப்பிட முடியாது என மறுக்கவே செய்தேன். ஆனால் அந்த ரெஸ்டாரண்டின் ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறியிருக்கின்றனர். இது முற்றிலும் பொய்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அகுயிலா ரெஸ்டாரண்ட் சார்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில் அர்யமினி தங்கள் ஊழியரை அடித்ததாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: