ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பெண் ஒருவரை நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனைச் சேர்ந்த 22 வயதாகும் அந்த இளம்பெண்ணின் குடும்பம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறது. இருப்பினும் அப்பெண் மட்டும் டெல்லியில் தனியாக தங்கியிருந்து வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதாகும் சாகர் என்பவருடன், அந்த இளம்பெண் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, இருவரும் மொபைல் நம்மர்களை பரிமாறி பேசி வந்துள்ளார். மாதக்கணக்கில் இருவரும் பேசிய நிலையில் அந்த இளம்ப்பெண்ணை காதலிப்பதாக கூறிய சாகர், தன்னுடைய பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் நேரில் பேசி திருமணம் குறித்து பேசுவதற்காக அவரது சொந்த ஊருக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
இதனை ஏற்று கடந்த மே 3ம் தேதி ஹோதல் பகுதிக்கு சென்று தன்னுடைய காதலன் சாகரை சந்தித்திருக்கிறார் அந்த இளம்பெண். இருப்பினும் பெற்றோரை சந்திக்காமல் அருகில் உள்ள கிராமம் ஒன்றின் காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். இருவரும் அங்கே மது அருந்தியதாகவும், உணவு உட்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சாகரின் சகோதரர் சமுந்தர் மற்றும் அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் கும்பலாக மது அருந்தியுள்ளனர். சாகர், அவருடைய சகோதரர், நண்பர்கள் அந்த இளம் பெண்ணை இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மறு நாள் காலை பழைய இரும்பு வியாபாரம் பார்த்து வந்த ஆகாஷிடம் அந்த பெண் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கும் 5 பேர் அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். சாகர் உட்பட 25 பேர் அந்த இளம்ப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் பதர்பூர் அருகே அவரை வீசிச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்தும் உடல் ரீதியாகவும் அந்த இளம் பெண் மீண்டு வர 9 நாட்கள் ஆகியுள்ளது. இதன் பின்னர் தெம்மை வரவழைத்துக் கொண்டு மே 12ம் தேதி ஹசன்பூர் காவல்நிலையத்திற்கு சென்று 25 பேர் மீதும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய நபரான சாகரை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருந்து வரும் பிறரை தேடி வருகின்றனர்.
Read More: தங்கையிடம் முத்தம் கேட்ட இளைஞர்: லாட்ஜிக்கு வரவைத்து அடி வெளுத்து அனுப்பிய அண்ணன் - வைரலாகும் வீடியோ
கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள இந்த நேரத்திலும் டெல்லி அருகே நடைபெற்றுள்ள இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime | குற்றச் செய்திகள், Delhi, Gang rape, Rape case, Sexual harasment