• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Dengue | டெல்லியை வாட்டும் டெங்கு காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Dengue | டெல்லியை வாட்டும் டெங்கு காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கடந்த வாரம் நகராட்சிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 வரை 97 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
டெல்லியில் இந்தாண்டு டெங்கு நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, தலைநகர் டெல்லியில் இந்தாண்டு குறைந்தது 124 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 137ஆக இருந்ததை விட இந்த ஆண்டு அதிகமாகும். இந்த ஆண்டில் மட்டும் பதிவான 124 பாதிப்புகளில், சுமார் 72 நோயாளிகள் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த அறிக்கையின்படி சுமார் 58 சதவிகிதம் ஆகும். செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல், முதல் நான்கு நாட்களில் எந்த டெங்கு பாதிப்பும் பதிவாகவில்லை.

டெங்கு கொசு லார்வாக்கள் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதே நேரத்தில், மலேரியா அழுக்கு நீரில் கூட வளர்கிறது. இதுபோன்ற நோய்களின் பாதிப்புகள் வழக்கமாக ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பதிவாகும். ஆனால், தற்போது டிசம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் நகராட்சிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 வரை 97 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டெங்குவால் இதுவரை எந்த இறப்பும் டெல்லியில் பதிவாகவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 வரை 57 மலேரியா மற்றும் 32 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகியவற்றுடன் அதிக காய்ச்சல் உள்ளதால் தங்களை கொரோனா வைரஸ் தாக்கியதாக மக்கள் சந்தேகிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Must Read | வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

எனவே, இதுபோன்ற பரவும் நோய்களைத் தடுப்பதற்காக டெல்லியில் உள்ள சிவில் அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபெரோசாபாத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபெரோசாபாத் மாவட்டத்தில் கடந்த பதினைந்து நாட்களில் 51 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலும் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வைரஸ் காய்ச்சலானது அருகில் உள்ள மதுரா மற்றும் மெயின்புரி மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது அம்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரப்பிரதேசத்தின் ஃபெரோசாபாத்திற்கு காய்ச்சல் மற்றும் அதிக குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை ஆராய அனுப்பப்பட்ட ஒரு மத்திய குழு, பெரும்பாலான பாதிப்புகள் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டது என்று அறிக்கை சமர்பித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கை அடிப்படையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் உத்தரபிரதேச தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் டெங்கு, மலேரியா, ஸ்க்ரப் டைபஸ் (scrub typhus) மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis) ஆகிய அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: