டெல்லியை அச்சுறுத்தும் ‘ஹிட் ஐலண்ட் எஃபெக்ட்’- தட்பவெப்பத்தில் அதிர்ச்சியூட்டும் மாற்றம்
டெல்லியை அச்சுறுத்தும் ‘ஹிட் ஐலண்ட் எஃபெக்ட்’- தட்பவெப்பத்தில் அதிர்ச்சியூட்டும் மாற்றம்
டெல்லி வெப்ப நிலை
தலைநகர் டெல்லியில் இந்த கோடைக்காலம் பல விசித்திரங்களைச் சந்தித்து வருகிறது பொதுவாகவே கோடையென்றால் மேலதிக வெயிலும் குளிர் காலம் என்றால் பயங்கர குளிரும் இருவேறு தீவிர நிலைக்குப் பெயர் போனதுதான் டெல்லி தட்பவெப்பம். ஆனால் இந்த முறை ‘ஹிட் ஐலண்ட்’ அதாவது 'Hit Island' என்ற நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹிட் ஐலண்ட் ஃபினாமினா என்றால், யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் அருகே 46.4 டிகிரி செல்சியஸ் பதிவானது, ஆனால் அதற்கு 5 கிமீ தூரமே உள்ள இடத்தில் 42.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இதனை வானியல் நிபுணர் ஆர்.கே.ஜெனமனி, ‘ஹிட் ஐலண்ட் எஃபெக்ட்’ என்று கூறுகிறார்.
ஹிட் ஐலண்ட் எஃபெக்ட் என்றால் என்ன?
அமெரிக்க சுற்றுச்சூழல் காப்பு முகமை இணையதளம் என்ன கூறுகிறது என்றால், பொதுவாக நகரங்களில் மனிதன் உருவாக்கும் கட்டுமானங்கள், கட்டிடங்கள், மால்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் ஆகியவை மேலதிக வெப்ப நிலையின் தீவுகளாகி விடுகின்றன. இது புறநகர்ப்பகுதிகளை ஒப்பிடுகையில் மிக அதிக வெப்ப நிலை கொண்டதாகும்.
ஏனெனில் பெரிய பெரிய கட்டிடங்கள், மால்கள் போன்றவை அதிக சூரிய வெப்பத்தை உள்வாங்கி பெரிய அளவில் அதை எதிர் பிரதிபலிப்பு செய்கிறது. இதனால் நகரங்களில் அதிக வெப்ப நிலை என்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது இயல்பு நிலையல்ல, மனித உருவாக்கங்களினால் ஏற்படுவதாகும் இதுதான் ஹிட் ஐலண்ட் எஃபெக்ட். மாறாக பசுமை அதிகம் இருந்தாலோ, நீர் நிலைகள் இருந்தாலோ அங்கு வெப்ப நிலை குறைவாகவே இருக்கும்.
வானிலை நிபுணர் ஜென்மனி கூறுகையில் ஹிட் ஐலண்ட் எஃபெக்ட் வேலை செய்தால் வெப்ப நிலையை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் அதிகப்படுத்துகிறது. இதனால் 300 மீ இடைவெளியில் கூட வெப்ப நிலை அளவில் கடும் வேறுபாடு நிலவுகிறது என்கிறார். அக்ஷர்தாமில் பசுமை என்பதே இல்லை, மாறாக யமுனா நதியிருந்தும் வெப்ப நிலை அதிகரிப்பதை குறைக்க முடியவில்லை. மாறாக மயூர் விகார் பகுதியில் செயற்கை ஏரி உருவாக்கப்பட்டு கொஞ்சம் பசுமையும் இருப்பதால் வெப்ப அளவு குறைவாகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த கோடையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது நாட்டின் பல பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸைக் கடந்து விட்டது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.