டெல்லியில் நடைபெறும் வன்முறையை காவல்துறையினரால் கட்டுபடுத்த முடியவில்லை, ராணுவத்தை அழைக்கும் நேரம் இது என்று முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறிஉள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 11 காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
Also Read : ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 24 பேர் உயிரிழப்பு..!
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறை தொடர்பாக இரவு முழுவதும் மக்களிடம் விசாரித்து கொண்டு தான் இருந்தேன். நிலைமை ஆபத்தாக உள்ளது.
காவல்துறையினரால் நிலைமையைக் கட்டுபடுத்த முடியவில்லை. ராணுவத்தை அழைக்கும் நேரம். ராணுவத்தை அழைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றும் பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.