• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி வன்முறை - குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு

டெல்லி வன்முறை - குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லி வன்முறை தொடர்பாக சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்று குடியரசுத் தலைவரிடம் இன்று மனு அளித்துள்ளனர். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவிவிலக வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் தொடரும் வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி, அதன் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியாகாந்தி, டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும், உள்துறை அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளையும் சோனியாகாந்தி முன்வைத்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறை வெடித்த ஞாயிற்றுக்கிழமை முதல் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என அவர் வினவினார்.

    கலவரம் உச்சகட்டத்தில் இருந்த போது, டெல்லி முதலமைச்சர் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    உள்துறை அமைச்சகம் கூறுவதைப் போல வன்முறை தானாக உருவானதா? அல்லது உள்துறை இணை அமைச்சகம் கூறுவதைப் போல தூண்டிவிடப்பட்டதா?

    ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை வெடிக்கும் என தெளிவாக தெரிந்த நிலையில், பிரச்னைக்குரிய பகுதிகளில் குவிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    டெல்லி காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை கைமீறி சென்ற போது, உடனடியாக துணை ராணுவப்படையினர் அழைக்கப்படாதது ஏன்? என மத்திய அரசுக்கு சோனியாகாந்தி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

    இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். சோனியாகாந்தி தலைமையில் விஜய் சவுக் பகுதியிலிருந்து பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். இந்தக் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், சிதம்பரம், அகமது படேல், கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: