டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம்

டெல்லி பல்கலைக்கழம்

தமிழக எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும் நீக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில், பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

  தமிழக எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவியின் திரௌபதி படைப்பும் நீக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம், புதன்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

  இந்நிலையில் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மாற்றாக முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களான சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

  சுகிர்தராணி - பாமா


  Must Read : ஆண்டுதோறும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

  டெல்லி பல்கலைக்கழகத்தில் எந்த பாடத் திட்டங்களை சேர்க்கலாம் என ஆலோசிக்கும் குழுவில் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: