Home /News /national /

மாணவர்களின் நியாபக சக்தியை அதிகரிக்க டியூசன் ஆசிரியர் செய்த விபரீத செயல்!

மாணவர்களின் நியாபக சக்தியை அதிகரிக்க டியூசன் ஆசிரியர் செய்த விபரீத செயல்!

மாதிரி படம்

மாதிரி படம்

விசாரணையில் மாணவர்களின் டியூசன் ஆசிரியர் NS (Normal Ssaline) தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களுக்கு சொலியுஷனை வழங்கியது தெரியவந்தது.

  • News18
  • Last Updated :
20 வயது டியூசன் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு NS சொலியுஷனை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். இந்த தகவல் வெளியே பரவிய நிலையில், டெல்லி காவல்துறையினரால்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு டெல்லியின் மண்டவாலியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை எடுத்துவரும் BA  இரண்டாம் ஆண்டு மாணவர் சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். மாணவரின் பெற்றோர் ஒருவர் தங்கள் குழந்தை வீட்டில் ஊசி போடுவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

விசாரணையில் மாணவர்களின் டியூசன் ஆசிரியர் NS (Normal Ssaline) தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களுக்கு சொலியுஷனை வழங்கியது தெரியவந்தது.

Also read... காஷ்மீரின் முதல் பெண் பவர்-லிஃப்டர்.. திருமணத்திற்கு பிறகும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய தாய்!

என்.எஸ் சொலியுஷன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டால் குழந்தைகளின் நினைவகம் மேம்படும் என்று தான் YouTubeல் பார்த்ததாக சந்தீப் கூறினார். இது சம்மந்தமாக மண்டவாலி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கிழக்கு டெல்லியின் DCP தீபக் யாதவ் தெரிவித்தார்.

IPCயின் பிரிவு 336 இன் கீழ் (கவனக்குறைவான செயலால் மனித உயிருக்கு ஆபத்து) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் விசாரிக்கப்பட்டு, மேலும் விவரங்கள் வழக்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Delhi, Tuition

அடுத்த செய்தி