அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air) சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் என்பது கொலம்பியா பல்கலைகழகத்தில் உள்ள அறிஞர்களும், ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூஷன் (IHME) என்ற இரு நிறுவனக்களின் கூட்டமைப்பாகும். உலக அளவில் சுமார் 7000 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை தற்போது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
PM 2.5 என்ற காற்றை மாசுபடுத்தும் பொருளையும், நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவையும் வைத்து இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. PM 2.5 என்பது எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பால் மட்டுமே பார்க்கக்கூடிய சிறிய நுண்பொருளாகும். இது மிகவும் சிறியதாக இருப்பதால், மனிதர்களின் நாசிக்குள் எளிதாக சென்று பல சுவாச பிரச்சணைகளை உருவாக்க முடியும். அதிகம் வாகனங்களை பயன்படுத்துவதால், நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது.
இந்த ஆய்வின் முடிவில் இந்திய நகரங்களான டெல்லி 110 PM அளவை கொண்டு முதலிடத்திலும் கொல்கத்தா 84 PM அளவை கொண்டு இரண்டாவது இடத்திலும், உள்ளது. மும்பை 45.1 PM அளவை கொண்டு 14ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவிலுள்ள கானோ 83 PM அளவை கொண்டு மூன்றாவது இடத்திலும், பெரு நாட்டிலுள்ள லிமா 110 PM அளவை கொண்டு நான்காவது இடத்திலும் உள்ளது. பங்களாதேஷில் உள்ள டாக்கா 110 PM அளவை கொண்டு இந்த ஆய்வில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை சேர்ந்த இந்த மூன்று நகரங்களை தவிர, முதல் 20 இடங்களில் வேறு எந்த நகரமும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Delhi, Pollution