ஹோம் /நியூஸ் /இந்தியா /

தினம் தினம் பிரச்னை! நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! அவதிக்குள்ளான பயணிகள்!

தினம் தினம் பிரச்னை! நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! அவதிக்குள்ளான பயணிகள்!

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயிலில் பயணித்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சதாப்தி ரயிலுக்கு மாற்றவிடப்பட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் முன்னணி அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு முறை கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாள்களில் இரண்டு முறை விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில், நேற்று மேலும் ஒரு முறை கோளாறு நிகழ்ந்துள்ளது.

  டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் நேற்று காலை 6 மணி அளவில் புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் சுமார் 90 கிமீ பயணத்திற்குப் பின் குஜ்ரா என்ற ரயில் நிலையத்தை அடைந்த போது ரயில் சக்கரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது. சி8 கோச் அருகே உள்ள ரயில் சக்கரங்களில் பேரிங் கோளாறு ஏற்பட்டு பணி புரியும் கேட்மேனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேக வண்டிகளில் இந்த பேரிங் தான் பாதுகாப்பான முக்கிய பங்காற்றுகிறது. இதில் கோளாறு என்பதை கவனிக்கவிட்டால் மிக ஆபத்தான விபத்துகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.

  எனவே, ரயிலில் பயணித்த 1,068 பயணிகளும் சதாப்தி ரயிலுக்கு மாற்றப்பட்டு, இந்த வந்தே பாரத் ரயிலை டெப்போவுக்கு கொண்டு சென்று சரி செய்துள்ளனர். இந்த கோளாறுக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் குறித்து விபத்து அல்லது கோளாறு செய்தி வெளிவந்த உள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று புதிதாக தொடங்கப்பட்ட காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயில் எருமை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் முகப்பு பகுதி சேதமடைந்தது.

  இதையும் படிங்க: தசரா விழாவில் முழுமையாக எரியாத ராவணன் தலைகள்!... நகராட்சி அதிகாரிமீது பாய்ந்த நடவடிக்கை!

  அதேபோல் அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் இதே காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயில் பசுமாடு மீது மோதி மீண்டும் ஒரு முறை விபத்துக்குள்ளானது.புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் அடுத்தடுத்த நாள்களில் விபத்துக்குள்ளானது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்த மூன்றாவது நாளாக மற்றொரு வந்தே பாரத் ரயிலில் கோளாறு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Private rail, Vande Bharat