துப்பாக்கியை வைத்து டிக்-டாக் வீடியோ... தவறுதலாக நண்பன் சுட்டதில் மாணவர் உயிரிழப்பு..!

சல்மான் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அங்கிருந்து நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

news18
Updated: April 15, 2019, 8:31 AM IST
துப்பாக்கியை வைத்து டிக்-டாக் வீடியோ... தவறுதலாக நண்பன் சுட்டதில் மாணவர் உயிரிழப்பு..!
சல்மான்
news18
Updated: April 15, 2019, 8:31 AM IST
நாட்டு துப்பாக்கியுடன் டிக்-டாக் வீடியோ பதிவு செய்ய முயன்ற டெல்லி மாணவர், தவறுதலாக குண்டு பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்மார்ட்போன் உலகத்தில் தற்போது டாப் இடத்தில் இருப்பது டிக்-டாக் மற்றும் பப்ஜி ஆகிய இரண்டும் தான். இரண்டுமே அளவுக்கு அதிகமாக சென்றால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு சாட்சியாக பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான் (19), தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவில் காரில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார்.

படிக்க... டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு!

அங்கு, டிக்-டாக் மூலம் துப்பாக்கியை வைத்து வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர். காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சல்மானின் கண்ணத்தில் நாட்டு துப்பாக்கியை மற்றொரு நண்பரான சொகைல் வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில், கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததால் சல்மான் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சல்மானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

படிக்க... தடை விதிக்கும் அரசின் முடிவு... என்ன சொல்கிறது டிக் டாக்...!

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அங்கிருந்து நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து, தப்பி ஓடிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...