Home /News /national /

டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவைவிட தாண்டியது: பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவைவிட தாண்டியது: பள்ளிகளுக்கு விடுமுறை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
    டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அபாய அளவை தாண்டியதால் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகை முதல் காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. இதனால், கடந்த 1-ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகட்டத்தை எட்டியுள்ளதால், இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நிலக்கரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை இரண்டு நாட்களுக்கு மூடவும் ஆணையிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுளது .

    மேலும் நொய்டா, குர்கான், காசியாபாத் நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Air pollution, Delhi

    அடுத்த செய்தி