ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்.. பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் கொடூரம்

பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்.. பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் கொடூரம்

டெல்லி ஆசிட் வீச்சு

டெல்லி ஆசிட் வீச்சு

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவி மீது அவருடன் நட்பாக இருந்த இளைஞர் ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லி உத்தம் நகர் பகுதியில் நேற்று 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி, தனது தங்கையுடன் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் அந்த 12ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த ஆசிட் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவி சஃப்தார்ஜங்க் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டப்பகலில் சாலையில் மாணவி ஒருவர் மீது ஆசிட் தாக்குதல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து  விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சச்சின் அரோரா என்ற 20 இளைஞர் ஆவார். இவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இடையே நீண்ட காலமாக பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாணவி சச்சினுடன் பிரேக் அப் செய்து மூன்று மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சச்சின், மாணவியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் நண்பர்களுடன் சேர்ந்து ஆசிட் தாக்குதல் திட்டத்தை தீட்டியுள்ளார். இதற்காக பிளிப்கார்ட் மூலமாக ஆசிட் வாங்கியுள்ளார்.

போலீசாரை திசைதிருப்பும் நோக்கில் சம்பவத்திற்கு முன்னர் சச்சின் தனது செல்போனையும், வண்டியையும் வீரேந்தர் சிங் என்ற நண்பரிடம் கொடுத்துவிட்டு, ஹர்ஷித் அகர்வால் என்ற மற்றொரு நண்பருடன் ஆசிட் எடுத்துக்கொண்டு வந்து மாணவி மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓடியுள்ளார்.இந்த குற்றச் செயல் தொடர்பாக சச்சின் மற்றும் அவரது இரு நண்பர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதையும் படிங்க: கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 33 வயது பெண் மரணம் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Acid attack, Crime News, Delhi