Home /News /national /

ஓமைக்ரான் தொற்றால் டெல்லியில் ஒருவர் பாதிப்பு - இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

ஓமைக்ரான் தொற்றால் டெல்லியில் ஒருவர் பாதிப்பு - இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

omicron

omicron

டெல்லி நபருடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சததை கடந்துள்ளது. இது தவிர வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கம், தீவிர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் வேலையிழந்தும், தொழில் நலிவுற்றும் ஏராளமானோர் பொருளாதார ரீதியில் சிதைவுற்றுள்ளனர். இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது, இனி இயல்பு நிலைக்கு திரும்பலாம் என பெருமூச்சு விடுவதற்குள் ஓமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா திரிபு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த ஓமைக்ரான் வகை உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதிலேயே வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாகவும், இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Also read:  ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பல நாடுகளுக்கும் பரவிய நிலையில் கடந்த வாரம் கர்நாடகாவில் இருவருக்கு கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஓமைக்ரான் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது. கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவருக்கும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரம் திரும்பிய 33 வயது இளைஞர் ஒருவருக்கும் அடுத்தடுத்து ஓமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகி இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உறுதிப்படுத்தியுள்ளார்.

Also read:  இனி வாட்ஸ் அப் மூலம், Uber app பயன்படுத்தாமலேயே Cab-ஐ புக் செய்யலாம் - புதிய வசதி

தான்சானியா நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் மாதிரியை சோதித்து பார்த்ததில் அவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள LNJP மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

டெல்லி நபருடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Omicron

அடுத்த செய்தி