• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு; 100க்கும் குறைவான ஐசியூ படுக்கைகளே உள்ளது - குமுறும் கெஜ்ரிவால்!

25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு; 100க்கும் குறைவான ஐசியூ படுக்கைகளே உள்ளது - குமுறும் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் கூடுதல் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் கூடுதல் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்திட்ட 25,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். முந்தைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா பரவல்விகிதம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள 10000 படுகைகளில் 1800 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 100 க்கும் குறைவான ஐசியூ படுக்கைகளே உள்ளது" எனத் தெரிவித்தார்.

    "இதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது, இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தான் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் பேசியதாகவும், டெல்லியில் கொரோனா பரவல் வீரியத்தை புரிந்து கொண்டு மருத்துவமனைகளில் கூடுதலாக 7000 முதல் 10000 படுக்கைகள் வரை கூடுதலாக ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளதாகவும்" முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    டெல்லியில் உள்ள யமுனா விளையாட்டு அரங்கத்தின் வளாகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் உயர் அழுத்த ஆக்சிஜன் வசதி கொண்ட 6,000 படுக்கைகள் தயார் செய்யப்படும் எனவும், முதல் அலையின் போது பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட கோவிட் சிறப்பு மையங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    சராசரியாக நாளொன்றுக்கு 25000 புதிய பாதிப்புகள், 1000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் கொரோனாவால் ஏற்பட்டுவரும் நிலையில், ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்று டெல்லி திரும்பும் டெல்லிவாசிகள் 14 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என டெல்லி பேரிடர் மீட்பு ஆணையமும் உத்தவிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: