பிரதமருக்கு அவபெயர் ஏற்படுத்தவே செங்கோட்டை முற்றுகை: போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தகவல்!

செங்கோட்டை முற்றுகை

முன்கூட்டியே திட்டமிட்டபடி அதிக அளவிலான விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்ததாகவும், செங்கோட்டையை  கைப்பற்றி தங்களது புதிய போராட்டக்களமாக மாற்றுவதற்கு  விவசாயிகள் முடிவு செய்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
    விவசாயிகளின் டெல்லி செங்கோட்டை முற்றுகையால் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக உலக அளவில் அவதூறு ஏற்படுத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

  மத்திய அரசின் புதிய 3  வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இதுவரை 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில்,  கடந்த ஜனவரி மாதம் குடியரசு   தினத்தின்போது டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

  இந்த  டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. ஒரு தரப்பினர் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி, தடுப்புகளை உடைத்துக் கொண்டு செங்கோட்டைக்கு சென்று, அங்கு தங்களது கொடியை பறக்க விட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் விவசாயிகளும், போலீசாரும் காயமடைந்ததோடு, பேருந்துகளும், தனியார் வாகனங்களும் சூறையாடபட்டன.
  கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   8 பேருந்துகள், 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என்றும் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்   25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், செங்கோட்டை முற்றுகை குறித்து குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். அதில், முன்கூட்டியே திட்டமிட்டபடி அதிக அளவிலான விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்ததாகவும், செங்கோட்டையை  கைப்பற்றி தங்களது புதிய போராட்டக்களமாக மாற்றுவதற்கு  விவசாயிகள் முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க.. மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு: ஓ.பி.ரவிந்தரநாத், தம்பிதுரைக்கு வாய்ப்பு

  மேலும், உலகம் முழுவதும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப ஜனவரி 26ஆம் தேதியை போராட்டக்காரர்கள் தேர்வு செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருப்பதோடு, இதற்காக கடந்த நவம்பரிலேயே அவர்கள் திட்டமிட்டதாகவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: