Home /News /national /

டெல்லியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!! அச்சத்தில் மக்கள்!

டெல்லியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!! அச்சத்தில் மக்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாத வரை கவலை கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமாகும்.

    டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட ஒமைக்ரான் பரவல் அண்மை காலமாக குறைந்து காணப்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குபின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

    அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்ரான் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தவறுதலாக விஷ காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழப்பு...

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 299 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 202 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    நேற்று ஒரே நாளில் 176 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,65,796ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 26,155 ஆக அதிகரித்துள்ளது.

    டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறும்போது, டெல்லி அரசு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாத வரை கவலை கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜன.13ம் தேதி ஒரே நாளில் 28,867 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி