• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யமுனை ஆற்றில் ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள் - சாத் விழா கொண்டாட்டங்கள் வைரலாகும் புகைப்படங்கள்

யமுனை ஆற்றில் ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள் - சாத் விழா கொண்டாட்டங்கள் வைரலாகும் புகைப்படங்கள்

யமுனை ஆறு

யமுனை ஆறு

யமுனையில் ரசாயனம் கலந்த நீரில் நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.

  • Share this:
    யமுனை ஆற்றில் பொங்கும் வரை நுரைகளுக்கு நடுவே டெல்லி மக்கள் சாத் பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    புகைப்படத்தில் இருக்கும் பெண் ஏதோ அண்டார்டிகாவில் பணிப்பாறைகளுக்கு மத்தியில் பூஜை செய்வதாக கருத வேண்டாம். டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் சாத் பூஜையில் ஈடுபட்டுள்ளார். தொழிற்சாலை கழிவுகளால் யமுனை நதி இவ்வாறு மாசடைந்துள்ளது.டெல்லி மக்கள் சத் பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. சுமார் 4 நாள்கள் இந்த விழா நடத்தப்படும்.

    இந்த நாள்களில் யமுனை நதியில் குளித்து சைவ உணவை உண்டு 36 மணிநேரம் விரதம் கடைப்பிடிக்கிறார்கள். சாத் நாளில் ஆறு அல்லது குளத்தில் உள்ள நீரில் குளித்து அந்த நீரில் உணவு சமைத்து அதன் உண்டு விரதம் இருப்பார்கள். டெல்லியில் யமுனை ஆற்றங் கரையோரங்களில் இந்த விழாவானது கொண்டாடப்படும். இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யமுனை ஆற்றின் கரையைத் தவிர பிற பகுதிகளில் கொண்டாட அரசு அனுமதி வழங்கியது.

     



    உத்தரப்பிரதேசம் , பீஹாரை சேர்ந்த மக்களே இந்த விழாவை பெரும்பாலும் கொண்டாடுவார்கள். டெல்லி பகுதியில் அவர்கள் பரவலாக காணப்படுவதால் சாத் விழாவுக்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாத் பூஜையை கொண்டாட நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். டெல்லியின் கலிந்தி கஞ்ச் பகுதியில் பாயும் யமுனை நதியில் ரசாயன கலவையின் காரணமாக பொங்கும் நுரையுடன் காட்சியளித்தது.

     



    பொங்கும் நுரையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நீராடினர். கலிந்தி கஞ்ச் அருகே யமுனை நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நீர் நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். பொதுமக்கள் யமுனை நதியில் நின்று சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது அண்டார்டிகா இல்லை நமது டெல்லிதான் என நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

    ரசாயன கழிவுகள் கலந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த அசுத்தமான நீரில் பெண்கள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். இந்த நீரில் உணவை சமைத்து உண்ணலாமா. உடல் நலம் என்னவாகும். சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்படுவதே இப்பிரச்னைக்கு காரணம்.

     



    கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பது, யமுனை ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பது போன்றவற்றால் ஆற்றில் நுரை ஏற்படுகிறது. இதன்காரணமாக யமுனை ஆற்றில் அம்மோனியா அளவு அதிகரித்து டெல்லி மக்களின் குடிநீர் தேவைக்கு யமுனை நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: