2022 ஆம் ஆண்டின் சுதந்திர விழா என்பது இந்தியாவிற்கு மிக முக்கியமான மற்றும் சிறப்புமிக்க விழாவாகும். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக பல சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த மாதம் தொடங்கியது முதலே விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் சோதனைகள் டெல்லி முழுவதும் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல், தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்க பல கட்ட பாதுகாப்புகள் போடப்படுகிறது. சுதந்திர தினத்திற்கான டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இங்கே:
சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டை மற்றும் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வழித்தடங்களில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு வேடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குள் தேசியக்கொடி ஓவியம் - வியப்பை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்!
வழக்கமான வான்வழி பாதுகாப்புப் பணிகளில் இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதல் மற்றும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை மற்றும் மத்திய அமைப்புகளுடன் நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன் பராமரிக்கப்படுகிறது. IEDs (மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள்) ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய டெல்லி காவல்துறையும் சோதனையை மேற்கொண்டு வருகிறது.
குடியிருப்பு நலச் சங்கங்கள், சந்தை நலச் சங்கங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையைச் சுற்றி காத்தாடிகள், பலூன்கள் அல்லது எந்த வகையான பறக்கும் பொருள்களும் காணப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வெளியிடப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றுமாறு மக்களை காவல் துறை கேட்டுக்கொள்கின்றனர்
தலைநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர், ரோந்து பணியை தீவிரப்படுத்தி, அசம்பாவிதத் தடுப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அரசுத் தேர்வில் ஒன்றாக தேர்ச்சியடைந்த தாய், மகன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
குத்தகைதாரர்கள் மற்றும் பணியாளர்களின் சரிபார்ப்பு இயக்கம் மூலம் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் உணவகங்கள் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முக்கிய விருந்தாளிகள் வரும் பாதைகளைக் கண்காணிக்க, சுமார் 1,000 உயர்தர கேமராக்கள் பொருத்தப்படும். இந்த வேலையை நகர காவல்துறையின் வடக்கு, மத்திய மற்றும் புது தில்லி மாவட்டப் பிரிவு காவல்துறைகளால் நிறுவப்படும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாராகிளைடர்கள், ஹேண்ட்கிளைடர்கள், அனல் காற்று பலூன்கள் போன்ற வான்வழிப் பொருட்களை பறக்கவிடக் கூடாது என்று போலீஸார் ஜூலை 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு ஆகஸ்ட் 16 வரை தேசிய தலைநகரில் அமலில் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Independence day