Home /News /national /

பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன் - கைது செய்ய விரைந்தது டெல்லி காவல்துறை

பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன் - கைது செய்ய விரைந்தது டெல்லி காவல்துறை

கோப்பு படம்

கோப்பு படம்

பேஸ்புக் மூலமாக அறிமுகமாகிய அமைச்சரின் மகன், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகனை கைது செய்ய டெல்லி காவல்துறை ராஜஸ்தான் சென்றுள்ளது. இந்த சூழலில் அமைச்சரின் மகன் தலைமறைவாகியுள்ளார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அம்மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை டெல்லி சர்தார் பஜார் காவல்துறை விசாரித்து வருகிறது. புகார் அளித்த பெண்ணுக்கும் அமைச்சரின் மகன் ரோஹித்துக்கும் கடந்த வருடம் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் இருவருக்கும் இடையே உறவாக உருமாறி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பல முறை இருவரும் சந்தித்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரிடம் ரோஹித் பல முறை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி வந்த ரோஹித் ஹோட்டலில் ரூம் புக் செய்து தன்னை கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாக்கி அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பெண்ணின் உணவில் மயக்க மருந்து கலந்து இந்த செயலில் ஈடுபட்டதாக அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

    குற்றச்சாட்டப்பட்டுள்ள அமைச்சரின் மகன்


    அடுத்த நாள் அந்த பெண்ணிடம் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை காட்டியதை அடுத்து பெண் பதறிப்போய் அழத் தொடங்கியுள்ளார். பின்னர் தன்னை அமைச்சரின் மகன் கைவிட்டுவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த காவல்துறை, அமைச்சரின் மகனை கைது செய்ய இன்று ராஜஸ்தான் விரைந்துள்ளது. 15 பேர் கொண்ட குழு ஜெய்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், அங்கிருந்து அமைச்சரின் மகன் தப்பி தலைமறைவாகியுள்ளார்.

    இதையும் படிங்க: ஒரு குடும்பம் ஒரு வேட்பாளர்- காங்கிரஸ் தேர்தல் உத்தி பலிக்குமா?

    காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் வழங்கும் விதமாக மூன்று நாள் மாநாடு ராஜஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கையை டெல்லி காவல்துறை தற்போது மேற்கொள்கிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Rape case

    அடுத்த செய்தி