கிரண்பேடியைக் கொண்டுவாருங்கள்! டெல்லியை திணறவைக்கும் போலீசாரின் போராட்டம்

டெல்லி காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கிரண்பேடியைக் கொண்டுவாருங்கள்! டெல்லியை திணறவைக்கும் போலீசாரின் போராட்டம்
காவல்துறை போராட்டம்
  • News18
  • Last Updated: November 5, 2019, 4:47 PM IST
  • Share this:
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதலைக் கண்டித்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலுள்ள தீஸ் நீதிமன்ற வளாகத்தில் கடந்த சனிக்கிழமை, வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞருக்கும், காவலர் சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் காவலர் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியானது. இந்தநிலையில், டெல்லி காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள், ‘கிரண்பேடியை மீண்டும் காவல்துறை ஆணையாளராக கொண்டு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காவலர்களின் போராட்டத்தையடுத்து, டெல்லி காவல் ஆணையாளர் அமுல்யா பட்நாயக், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு முன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘இது நமக்கான சோதனை நேரம். நாம் பொறுமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இருப்பினும், காவல்துறையினரின் போராட்டம் தொடர்கிறது.

Also see:

First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்