டெல்லியில் பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு - சி.பி.ஐ விசாரணை கோரும் பெற்றோர்

மாதிரிப் படம்

டெல்லியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் சி.பி.ஐ விசாரணை கோருகின்றனர்.

 • Share this:
  டெல்லியில் பெண் காவல் அதிகாரி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை தேவை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  டெல்லியில் 21 வயதே ஆன காவல்துறை பெண் அதிகாரி, ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

  அவரது உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை போன்ற ஒரு நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

  இந்த வழக்கில் பெண் காவல் அதிகாரி உடன் பணிபுரிந்துவந்ததாக கூறப்படும் நிஜாமுதீன் என்பவர் சரணடைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெண் காவல் அதிகாரியுடன் தனக்கு திருமணம் நடைபெற்றாக கூறியுள்ளார்.

  இந்த திருமணத்தை பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால், இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை மறுத்துள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர், கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் சம்பவத்தன்று தனது நான்கு நண்பர்களுடன் நிஜாமுதீன் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
  Published by:Karthick S
  First published: