ஹோம் /நியூஸ் /இந்தியா /

'துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது கடமை' - தகன மேடையில் உதவி செய்யும் டெல்லி காவலர்

'துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது கடமை' - தகன மேடையில் உதவி செய்யும் டெல்லி காவலர்

ராகேஷ் சவுத்ரி

ராகேஷ் சவுத்ரி

ராகேஷ் சவுத்ரியின் மகளுக்கு மே-7 ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சூழலில் திருமணம் நடந்த அவர் மனம் உடன்படாததால் மகளின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டெல்லி காவல்துறையில் ஏஎஸ்ஐயாக இருக்கும் ராகேஷ் சவுத்ரி என்ற காவல் அதிகாரி லோதி தகன மேடையில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய உதவி வருகிறார். ஒரு நாளைக்கு 20 - 30 சடலங்களை தகனம் செய்ய உதவுவதால் வீட்டுக்கு செல்லாமல் டெல்லி நிஜாமுதீன் காவல் நிலையத்திலே தங்கிவிடுகிறார் 56  வயதாகும் ராகேஷ் சவுத்ரி.

  கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் உச்சம் பெற்றது. ஏப்ரல் 13-ம் தேதி லோதி தகன மேடை அருகே ராகேஷ் சவுத்ரி பணியில் அமர்த்தப்படுகிறார். இதனையடுத்து மனிதாபிமானத்தோடு இந்த உதவியை செய்து வருகிறார்.

  இதுகுறித்து ராகேஷ் சவுத்ரி கூறுகையில், “ ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 20- 30 சடலங்களை நாங்கள் இங்கு தகனம் செய்ய உதவுகிறோம். பல நேரங்களில் சடலங்களுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவார். சில நேரங்களில் நிறைய உறவினர்கள் வந்தாலும் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த சடலங்களை தொடுவதில்லை. அவர்கள் வாகன நிறுத்தும் இடத்திலோ அல்லது சாலைகளிலோ அமர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் தான் உடல்களை எடுத்துச்சென்று தகனம் செய்ய உதவுகிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1300 முதல் 1400 உடல்களை தகனம் செய்ய உதவியிருக்கிறோம்.

  ALSO READ: அம்மாவும் தம்பியும் தூங்குறாங்கன்னு நினைச்சேன்... அழுகிய சடலங்களுடன் 2 நாள்கள் இருந்த பெங்களூரு பெண்

  நான் எனது குடும்பத்தினருடன் தினமும் வீடியோ காலில் பேசுவேன். அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். அவர்கள் என்னிடம் கேட்டுக்கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள், நீங்கள் தற்போது செய்வதை தொடருங்கள் என்று தான் கூறுகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது எனது கடமை என உணர்கிறேன். கடவுளின் அருளால் இதுவரை நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. என்றார். கொரோனா தடுப்பூசியும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார்.

  ராகேஷ் சவுத்ரியின் மகளுக்கு மே-7 ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சூழலில் திருமணம் நடந்த அவர் மனம் உடன்படாததால் மகளின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Corona, Corona death, Covid-19, Delhi, Police